இஸ்ரேல் படைகளாலேயே சுட்டுக் கொல்லப்பட்ட இஸ்ரேலிய பணயக் கைதிகள்

ஹமாஸ் போராளிகளால் பிணைக் கைதியாக வைக்கப்பட்டிருந்து, இஸ்ரேலிய இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்ட , 26 வயது ஆலன் ஷம்ரிஸின் இறுதிச் சடங்கில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.

டெல் அவிவின் வடக்கே உள்ள கிப்புட்ஸ் ஷெஃபைமில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

அக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் போராளிகள் இந்தப் பகுதியில் தாக்குதல் நடத்தி 52 பேரைக் கொன்றதுடன் , 17 பேரை பணயக் கைதிகளாகப் பிடித்தனர்.

70 நாட்கள் , காசா பகுதியில் ஹமாஸ் போராளிகளின் பிடியில் பணயக்கைதிகளாக உயிர் பிழைத்த அலாஸ் ஷம்ரிஸ் மற்றும் இருவர், கடந்த வெள்ளிக்கிழமை ஹமாஸின் பிடியில் இருந்து தப்பி வெளியேறிய போது, இஸ்ரேலிய படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக இஸ்ரேலிய ராணுவ பிரிவுகளால் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக சிஎன்என் தெரிவித்துள்ளது.

ஹமாஸ் போராளிகளால் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட மூவர், வெள்ளைக் கொடிகளுடன் அந்தப் பகுதியை நெருங்கத் தயாரானபோது, ​​போர்ச் சட்டங்களை மீறி இஸ்ரேலியப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக CNN செய்தி வெளியிட்டுள்ளது.

சிஎன்என் காசா நகரின் ஷெஜய்யாவில் படைகள் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் இருந்து 10 மீட்டருக்கும் அதிகமான தொலைவில் உள்ள கட்டிடத்தில் இருந்து கொல்லப்பட்ட மூவரும் சட்டையின்றி வெள்ளைக் கொடிகளை அசைத்தபடி வெளியே வந்ததாக அநாமதேயமாக பேசிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஒருவரது செயல் அச்சுறுத்தலானதை உணர்ந்து ஒரு சிப்பாய் துப்பாக்கிச் சூடு நடத்தினார், இரண்டு ஆண்கள் உடனடியாகவே சுட்டுக் கொல்லப்பட்டனர் மற்றும் ஒருவர் காயமடைந்தார், என செய்தித் தொடர்பாளர் கூறினார். காயமடைந்த மூன்றாவது நபர் தப்பி மீண்டும் கட்டிடத்திற்குள் ஓடினார். இஸ்ரேலிய மொழியான ஹீப்ரு மொழியில் ஓடிய நபர் உதவி கேட்டு அழும் குரல் கேட்டது, அந்த நேரத்தில் அங்கு பொறுப்பாக இருந்த தளபதி, தனது துருப்புக்களுக்கு துப்பாக்கிச் சூட்டை நிறுத்த உத்தரவிட்டார். இருப்பினும், மற்றொருவரது துப்பாக்கிச் சூட்டால் உள்ளே ஓடிய மூன்றாவது பணயக்கைதியும் கொல்லப்பட்டார்.

இஸ்ரேலிய இராணுவ செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரி கூறுகையில், பணயக்கைதிகள் துருப்புக்களை நோக்கி வருவார்கள் என இஸ்ரேலிய வீரர்கள் எதிர்பார்க்கவில்லை எனவும், பணயக்கைதிகள் ஒரு கட்டிடத்திலோ அல்லது சுரங்கப்பாதையிலோ கைவிலங்கிடப்பட்டிருக்கலாம் என அவர்கள் கருதினர் எனவும் தெரிவித்தார்.

தவறுதலாக கொல்லப்பட்ட மூன்று பணயக்கைதிகள் பற்றி இஸ்ரேலிய இராணுவத்திற்கு எந்த உளவுத்துறையும் தகவல் வழங்கவில்லை என்றும், தற்செயலாக எதிர்பாராமல் நடந்த ஒரு தவறு இது எனவும் சனிக்கிழமையன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளரான டேனியல் ஹகாரி மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.