வெற்றி வாகை சூடிய கில்மிஷாவுக்கு ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தென்னிந்தியாவின் ZEE தமிழ் தொலைக்காட்சி நடத்திய சரிகமப இசை நிகழ்ச்சிப் போட்டியில் முதலிடம் பெற்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிறுமி கில்மிஷாவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

நேற்றைய தினம் (18) காலை அமைச்சரவைக் கூட்டம் முடிவுற்ற பின்னர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடாக ஜனாதிபதி தொலைபேசி மூலம் கில்மிஷாவைத் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து செய்தியொன்றையும் வெளியிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.