சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்த இராணுவச் சிப்பாய் ஒருவர் கைது!

புத்தளம் – நவகத்தேகம , வெம்புவெவ பகுதியில் உள்ள 14 வயது பாடசாலை சிறுமியை பலவந்தமாக கடத்தி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் என்ற சந்தேகத்தின் பெயரில் இளம் வயது இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குருவிட்ட , கெமுனுஹேவா பலகாயவில் பணியாற்றும் வஹரக – தலழுவெல பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இராணுவ சிப்பாய் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என நவகத்தேகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாக கூறப்படும் குறித்த சிறுமி , மருத்துவ பரிசோதனைக்காக ஆனமடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரான இளம் இராணுவ சிப்பாயை ஆனமடுவ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நவகத்தேகம பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.