இயலாமையுடைய நபர்கள் தொடர்பில் உணர்திறன் கொண்ட அரசாங்க பொறிமுறையை உருவாக்க உதவுங்கள் – இயலாமையுடைய நபர்கள், பாராளுமன்ற ஒன்றியத்திடம் கோரிக்கை.

🔷 இயலாமையுடைய நபர்கள் தொடர்பில் உணர்திறன் கொண்ட அரசாங்க பொறிமுறையை உருவாக்க உதவுங்கள் – இயலாமையுடைய நபர்கள், பாராளுமன்ற ஒன்றியத்திடம் கோரிக்கை

🔸 இயலாமையுடைய நபர்களுக்கான சுயாதீன ஆணைக்குழு நியமிப்பது தொடர்பில் கலந்துரையாடல்

🔸 டிசம்பர் முதல் இயலாமையுடைய நபர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க அனுமதி

🔸 1996 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தை நீக்கும் சட்டமூலம் தொடர்பில் கவனத்திற்கு

இயலாமையுடைய நபர்கள் தொடர்பில் உணர்திறன் கொண்ட அரசாங்க பொறிமுறையை உருவாக்க உதவுமாறு இயலாமையுடைய நபர்கள், இயலாமையுடைய நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

இயலாமையுடைய நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியம் அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ டலஸ் அழகப்பெரும தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதன்போது, 1996 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தை நீக்கும் சட்டமூலம் தொடர்பில் விரிவாகக் கருத்திற்கொள்ளப்பட்டதுடன், இயலாமையுடைய நபர்களுக்கான சங்கங்களின் ஒன்றிணைந்த முன்னணி, மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சின் பிரதிநிதிகள் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

உத்தேச சட்டமூலத்துக்கு அமைய, இயலாமையுடைய நபர்களுக்கு ஜனாதிபதி அல்லது பிரதமரின் தலைமையில் சுயாதீன ஆணைக்குழு நியமிப்பது தொடர்பில் இயலாமையுடைய நபர்களுக்கான சங்கங்களின் ஒன்றிணைந்த முன்னணியின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர். உத்தேச சட்டமூலம் தொடர்பில் விரைவாக நீதி அமைச்சருடன் கலந்துரையாடுவதாகத் தெரிவித்த ஒன்றியத்தின் தலைவர் கௌரவ டலஸ் அழகப்பெரும, இது தொடர்பில் இயலாமையுடைய நபர்களின் பங்கேற்புடன் ஜனாதிபதியுடன் விரைவாகக் கலந்துரையாடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், இந்த மாதம் முதல் (டிசம்பர்) இயலாமையுடைய நபர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க அனுமதி வழங்கியுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அஜித் மான்னப்பெரும இதன்போது தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் ஒன்றியத்தின் உறுப்பினர்களான கௌரவ மதுர விதானகே மற்றும் கௌரவ (வைத்தியகலாநிதி) சுதர்ஷினி பெர்னாந்துபுள்ளே ஆகியோரும், தலைவரின் அனுமதியுடன் இராஜாங்க அமைச்சர் கௌரவ அனுப பஸ்குவல் மற்றும் கௌரவ (மேஜர்) சுதர்ஷன தெனிபிடிய ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.