இலங்கையில் மேலும் 1,865 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் 1,865 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 145 பேருக்கு எதிராகத் தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளது.

அத்துடன், சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பில் 40 சந்தேகநபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதுடன், போதைப்பொருளுக்கு அடிமையான 134 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் விசேட பணியகத்தின் பதிவு செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பட்டியலில் இருந்த 154 சந்தேகநபர்களும் இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நடவடிக்கையில்,

* ஹெரோயின் – 613 கிராம்
* ஐஸ் – 746 கிராம்
* கஞ்சா – 16 கிலோ 500 கிராம்
* கஞ்சா செடிகள் – 2,72,041
* ஹஷீஷ் – 263 கிராம்
* மாவா – 49 கிலோ 400 கிராம்
* ஹேஷ் – 16 கிராம்
* தூள் – 852 கிராம்
* மதன மோதகம் – 479 கிராம்
* போதை மாத்திரைகள் – 3,142

– என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.