டீக்கடைக்குள் புகுந்த லாரி, 5 பேர் பலி!

புதுக்கோட்டையில் சிமென்ட் ஏற்றி வந்த லாரி டீக்கடை ஒன்றில் மோதியதில் ஐந்து பேர் பலியாகியுள்ளனர், 19 பேர் காயப்பட்டுள்ளனர்.

ரோட்டோர டீக்கடையை சேதமாக்கிய லாரி இரண்டு வாகனங்களையும் மோதியுள்ளது.

திருச்சி – ராமேசுவரம் நெடுஞ்சாலையில், அரியலூரிலிருந்து சிவகங்கை வந்துகொண்டிருந்த லாரி கட்டுப்பாட்டை இழந்ததில் ஒரு கார் மற்றும் வேனில் மோதியது. பின்னர் சாலையோரத்திலிருந்த டீக்கடை ஒன்றில் மோதியது.

4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்ததாத் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளதாகத் தெர்வித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.