தம்பியை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்த அண்ணன் கைது.

அநுராதபுரம், கல்னெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இடம்பெற்ற மோதலில் இளைய சகோதரனை மண்வெட்டியால் தாக்கிக் கொலை செய்த மூத்த சகோதரன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை (29) இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் அவுக்கண பிரதேசத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான லலித் சந்திரகுமார என்ற 46 வயதுடைய முன்னாள் கடற்படைச் சிப்பாய் ஆவார்.

இவர் கடற்படை முகாமில் கடமையாற்றும் காலத்தில் இடம்பெற்ற விபத்தில் ஊனமுற்று பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

இந்நிலையில், இரு சகோதரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், மூத்த சகோதரன் இளைய சகோதரனின் தலையில் மண்வெட்டியால் தாக்கியுள்ளார்.

இதில் காயமடைந்து தரையில் வீழ்ந்தவரை மூத்த சகோதரன் மீண்டும் பலமாகத் தாக்கிக் கொலை செய்துள்ளார்.

கொலையாளியான மூத்த சகோதரன் சம்பவ இடத்தை விட்டுத் தப்பிச் செல்ல முற்பட்டபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்னெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.