பெண்களே உங்கள் பிறப்புறுப்பு பகுதி வறட்சியா இருக்கா? கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள்

அநேகமான பெண்களின் பிறப்புறுப்பு பகுதி ஈரப்பதன் இல்லாமல் வறட்சியா இருக்கும். இதை பற்றி பெண்கள் பெரிதும் கவனத்தில் எடுப்பது இல்லை.

பிறப்புறுப்பு ஏற்படும் வறட்சி என்பது பெண்கள் மேற்கொள்ளும் ஒரு பொதுவான பிரச்சினை ஆகும். பெண்களுக்கு மாதவிடாய் நின்றபின் இந்த பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும். இந்த பிறப்புறுப்பு வறட்சியைக் கவனிக்காமல் விட்டுவிட்டால், முக்கியமாக பாலியல் வாழ்க்கையை பாதிக்கும். எதிர் விளைவுகளை ஏற்படுத்திவிடும். பிறப்புறுப்பு பகுதி வறட்சியைப் போக்க தீர்வுகளை இங்கே தருகிறோம்.

ஒட்டுமொத்த பெண்களின் எண்ணிக்கையில், பாதிக்கு மேற்பட்டோர் யோனியில் ஏற்படும் வறட்சி காரணமாக அவதிப்பட்டு வருவதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதுகுறித்து விளக்கமாக இந்த பகுதியில் தெரிந்து கொள்ளலாம்.

பிறப்புறுப்பு வறட்சி

பிறப்புறுப்புப் பகுதியில் வறட்சி ஏற்படுவதற்கான முக்கிய காரணம், பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவு சட்டென குறைந்துவிடும் காரணத்தால் நிகழ்கிறது.

பிறப்புறுப்பு வறட்சிக்கு சிகிச்சையளிப்பதற்கான தீர்வுகளைப் பற்றி பேசுவதற்கு முன் நாம் சில எளிதான முறையில் பெண்களின் உடலியல் கூறுகள் பற்றி இங்கே புரிந்துகொள்வோம் .

யோனி என்ற வார்த்தை சிலருக்கு புதிய சொல்லாக தோன்றலாம். யோனி என்பது ஒரு பெண்ணின் “vajina” என்ற உடலுறுப்பு. யோனி (புணர்புழை) என்பது சதைப்பற்றுள்ள, மீட்சித்தன்மையுடைய பெண் பிறப்புறுப்புப் பாதையாகும். கழுத்துப் போன்ற கருப்பையின் கீழ் பகுதிக்கும் புறத்தில் உள்ள பெண்குறிக்கும் இடைப்பட்ட இடைப்பட்ட பாதையாகும். யோனி பாலுறவையும் பிறப்பையும் அனுமதிக்கிறது. மாதவிடாய் வெளியேறத்திற்கு வழியாக இருக்கிறது.

​ஹார்மோன் அளவு

யோனியின் சுற்றுச் சுவர்களில் பல்வேறு சுரப்பிகள் காணப்படுகின்றன. மேலும், இந்த சுரப்பிகள பிறப்புறுப்பின் சுவரை ஈரப்பதத்துடனும், மிருதுவாகவும் வைத்திருக்கின்றன. இந்த ஈரப்பதம் இயற்கையிலேயே அமில வகையைச் சேர்ந்தது. இந்த அமிலம் யோனிப்பகுதியை ஆரோக்கியமாகவும், தொற்று நோய்களில் இருந்து பாதுகாப்பாகவும் வைத்திருக்கிறது. இந்நிலையில், ஈரப்பதம் குறைவதால் யோனி வறட்சி நிலையைச் சந்திக்கிறது. உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறைந்ததால் ஏற்பட்ட விளைவாகும்.

யோனி என்ற பெண்ணுறுப்பில் வறட்சி ஏற்படுவது பொதுவான விசயம்தான். ஆனால், உடலுறவில் ஈடுபடும்போது, வலி மற்றும் அசவுகரியம் ஏற்படுகிறது. இதனால் பாலியல் வாழ்வில் ஒருவிதமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். மேலும், தொற்றுநோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும். இந்த சிக்கலுக்கு மிக எளிதான தீர்வுகள் உள்ளன. அதற்கு முன் யோனி வறட்சிக்கான காரணங்களை முதலில் பார்ப்போம்.

யோனி வறட்சிக்கான காரணங்கள்

பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜனின் அளவு குறைவதால் ஏற்படும் குறைபாடு ஆகும். மாதவிடாய்க்குப் பின்னர், யோனியின் சுற்றுச்சுவர் உலர்ந்து போகும். இந்த மாற்றங்கள் யோனி அட்ராபி என்று மருத்துவத்துறையில் அழைக்கப்படுகிறது.

ஸ்ஜாக்ரென்ஸ் சின்ட்ரோம்

இந்த நோயின் அறிகுறிகள் உமிழ்நீர் மற்றும் கண்ணீர் சுரப்பிகளில் வீக்கத்தை ஏற்படுத்தும். அதன் திசுக்கள் வீக்கமடைந்து வறட்சிக்கு வழி வகுக்கும்.

ஆன்டி ஹிஸ்டமின்கள்

இந்த மருந்துகள் சளி காய்ச்சல் மற்றும் அலர்ஜி தொடர்பான உடல்நலக் கோளாறுகளை சரிசெய்யப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மருந்துகளை நாம் அடிக்கடி உட்கொள்வதால், பக்க விளைவுகளை ஏற்படுத்தும். யோனி சுவர்களில் வறட்சியை ஏற்படுத்தும். சிறுநீர் வெளியேறும்போது மிகுந்த சிரமத்தை உருவாக்கும்.

ஆன்டிடிரசன்ட்ஸ் மற்றும் மெனோபஸ்

நீங்கள் உட்கொள்ளும் சிலவகையான ஆன்டிடிரசன்ட்ஸ் மருந்துகள் உங்களுடைய பாலியல் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தும். தீங்கு செய்யும். முக்கியமாக, தாம்பத்திய உறவை கடினமாக்கும். யோனியில் வறட்சியை ஏற்படுத்தி இம்சை செய்யும். பொதுவாக மாதவிடாய் காரணமாக ஈஸ்ட்ரோஜன் அளவு குறைகிறது. யோனி உள்ளுறுப்பு வறட்சிக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.

உடலுறவு

சுறுசுறுப்புடன் இயங்கும் பாலியல் வாழ்வில் யோனி வறட்சி பிரச்சினை குறைவாகவே இருக்கும். ஒரு பெண்ணின் மனதில் உணர்ச்சிகள் தூண்டப்படும்போது, அவளுடைய யோனி உள்ளுருப்பின் திசுக்களுக்கு ரத்தஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் அவள் உள்ளுறுப்பு சுவர்களில் ஈரப்பதம் உருவாக உதவுகிறது. மேலும், உடலுறவுக்கு முன் யோனி என்ற உள்ளுறுப்பு மற்றும் அதனை பாதுகாக்கும் வழிமுறைகளை தெரிந்து வைத்திருப்பதும், விழிப்புணர்வும் வறட்சியைக் கோரித்து உடலுறவை மிகவும் மகிழ்ச்சிகரமானதாக மாற்றுகிறது.

காட்டன் உள்ளாடைகளை பயன்படுத்துங்க

யோனி மீது ஒட்டிக்கொண்டிருக்கும் செயற்கையான உள்ளாடைகள் அதிக எரிச்சலை உண்டாக்கும். காற்றின் தடை ஓட்டத்திற்கு வழிவகுக்கும். ஆனால், பருத்தியால் செய்யப்பட உள்ளாடைகள் உங்கள் உள்ளுருப்புக்கு போதுமான காற்றை வழங்குகின்றன.

பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் உணவுகள்

டோஃபு, கோட்டைகள், விதைகள் ஆகியவை ஈஸ்ட்ரோஜன்களின் நன்றாக செயல்பட உதவி செய்கின்றன. பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் அதிகம் உள்ள உணவுகளில் சோயா, கொட்டைகள், விதைகள்,டோஃபு போன்றவை அடங்கும். யோனி வறட்சியைத் தடுப்பதில் பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் உதவுகின்றன என மருத்துவ ஆய்வுகள் கூறுகிறது.

வாசனை திரவியங்கள்/சோப்புகள்

யோனிப்பகுதியைச் சுற்றி வாசனையற்ற கெமிக்கல் இல்லாத சோப்புகளைப் பயன்படுத்த வேண்டும். மேலும், நீங்கள் உபயோகிக்கும் காஸ்மெடிக் பொருட்களில் ரசாயனம் கலந்திருக்கும். முடிந்தவரை அதை உபயோகிப்பதைத் தவிர்த்து விடுங்கள். அவை யோனிப்பகுதியில் உள்ள திசுக்களை உலர்ந்து போகச் செய்துவிடும். உங்கள் உள்ளுறுப்பை சுத்தம் செய்வதற்கென்றே தனிப்பட்ட முறையில் சோப்புகள் விற்பனைக்கு வந்துள்ளது. எனவே, நீங்கள் வாசனையுள்ள சோப்புகளை உபயோகிக்கத் தேவையில்லை.

​டாக்டரை எப்போது சந்திக்க வேண்டும்…

மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றியும் உங்களுக்கு தீர்வு கிடைக்காதபட்சத்தில், பிரச்சினைகள் பின்தொடர்ந்தால், நீங்கள் டாக்டரை சந்தியுங்கள். உடலுறவின்போது கடுமையான வலி, அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்பட்டால் நீங்கள் நல்ல ஒரு டாக்டரை அணுகுவதே சாலச் சிறந்தது.

அறுவை சிகிச்சை

புற்றுநோய்க்கான கதிர்வீச்சு சிகிச்சை, கீமோதெரபி மற்றும் மார்பகப் புற்றுநோய், கருப்பைகள் அகற்றப்படுதல் மற்றும் ஹார்மோன் தொடர்பான சிகிச்சைகளுக்குப் பின் யோனி உள்ளுறுப்பு தொடர்பான சிறந்த டாகர்களை நீங்கள் அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

நடைமுறையில் இன்று மாதவிடாய் நின்ற பின்னர் பெண்களின் எண்ணிக்கையில், கிட்டத்தட்ட பாதியளவில் பெண்கள் யோனி உள்ளுறுப்பு வறட்சி பிரச்சினையில் சிக்கிக் கொள்கின்றனர். முக்கியமாக, புகைபிடிக்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொண்ட பெண்களுக்கு யோனி வறட்சி பிரச்சினை தலை விரித்தாடுகிறது. சிகரெட் குடிப்பதால் சட்டென ஈஸ்ட்ரோஜன் குறைகிறது.

கவனிக்க வேண்டிய விஷயங்கள்

மேற்கண்ட கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள உதவிக்குறிப்புகள், பரிந்துரைகள் பொதுவானவை, விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கத்தில் தகவல்களாகவே பகிர்கிறோம். பதிவு செய்கிறோம். இதை முழுநேர தொழில்முறை சார்ந்த மருத்துவர்களின் ஆலோசனையாக கருத வேண்டாம். மேலும், உங்கள் உடல் நலம் சார்ந்த பிரச்சினைகளைத் தீர்க்க நீங்களே முடிவெடுத்து மருந்துகளை எடுத்துக் கொள்ளக் கூடாது. தகுந்த மருத்துவர்களை உடனடியாக அணுகுங்கள் .உங்கள் உடல் நலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இங்கே நாங்கள் உதவுகிறோம். வருமுன் காப்போம் .

Thanks : Lanka news web

Leave A Reply

Your email address will not be published.