மகளிர் உரிமைத்தொகை.. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த 323 புதிய அதிகாரிகளை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்ககி வைக்கப்பட்டது. துவக்கத்தில் ஒரு கோடி பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, திட்டம் தொடங்கப்பட்ட நிலையில், ரூ.1 கோடியே 6 லட்சத்துக்கும் அதிகமானோர் தற்போது மகளிர் உரிமைத் தொகை பெற்று வருகின்றனர். அந்த தொகை மாதந்தோறும் அவர்களின் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திட்டத்தை செயல்படுத்த கூடுதல் பணியிடங்களை உருவாக்கவும், போதிய அதிகாரிகளை நியமிக்கவும் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வருவாய் ஆணையர்களின் பரிந்துரைத்த நிலையில், அதனை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அதன்படி, மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்த 323 அதிகாரிகள் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே ரூ.1 கோடியே 6 லட்சத்துக்கும் அதிகமானோர் உரிமைத் தொகை பெற்று வரும் நிலையில், மேலும் 11 லட்சத்து 85 ஆயிரம் மேல்முறையீட்டு மனுக்கள் வரபெற்றுள்ளதால், அவற்றை பரிசீலித்து நடவடிக்கை மேற்கொள்ளவும், திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தவும், கூடுதல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி, தருமபுரி மாவட்டம் கரிமங்கலம், ஈரோடு மாவட்டம் தாலவாடி, கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை, கரூர் மாவட்டம் கடவூர், நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை, புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி மற்றும் சென்னை மாதவரம் ஆகிய 8 பகுதிகளுக்கு சிறப்பு வட்டாட்சியர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று, 38 மாவட்ட அலுவலர்கள், 94 துணை வட்டாட்சியர்கள் உள்ளிட்ட 323 பணியிடங்கள் உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.