விபத்தில் சிக்கிய சென்னை சார்மினர் ரயில்..!

சென்னையிலிருந்து ஹைதரபாத் சென்ற சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயிலின் 5 பெட்டிகள் விபத்துக்குள்ளானதில் 10 பயணிகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையிலிருந்து நேற்று இரவு ஹைதராபாத் புறப்பட்டு சென்ற சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயிலின் 5 பெட்டிகள் ஹைதராபாத்தில் உள்ள நாம்ப்பள்ளி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் இருந்து விலகி பிளாட்பாரம் மீது மோதி விபத்துக்குள்ளானது.

சென்னையில் இருந்து நேற்று இரவு பயணிகளுடன் புறப்பட்டு சென்ற சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில் சற்று நேரத்திற்கு முன் ஹைதராபாத்தில் உள்ள நாம் பள்ளி ரயில் நிலையத்தை அடைந்தது. ரயில் நிலையத்திற்குள் நுழைந்தவுடன் ரயிலை ஓட்டுநர் மெதுவாக இயக்கினார். இந்த நிலையில் ரயிலின் s2, s3, s6 ஆகிய பெட்டிகள் உட்பட ஐந்து பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகி பிளாட்பாரம் மீது மோதி ஒரு பக்கம் நசிங்கி விபத்துக்குள்ளானது.

இதனால் நசுங்கிய ரயில் பெட்டிகளில் பயணித்த பயணிகளில் 10 பேர் காயம் அடைந்தனர். ரயில் நிலைய அதிகாரிகள், ரயில்வே போலீசார் ஆகியோர் உடனடியாக காயம் அடைந்த 10 பேரையும் மீட்டு லால்குடா ரயில்வே மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில் தண்டவாளத்தில் இருந்து விலகிய பெட்டிகளை மீட்டு ரயில் போக்குவரத்தை சீர் செய்யும் பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன.

மெதுவாக சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் மிகுந்த சப்தத்துடன் தண்டவாளத்தில் இருந்து விலகி பிளாட்பாரம் மீது மோதி விபத்தை பார்த்து ரயில் நிலையத்தில் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.