பெங்களூரு அணி 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி.

ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. துபாயில் நடந்த லீக் போட்டியில் கோஹ்லியின் பெங்களூரு அணி, வோர்னர் தலைமையிலான ஐதராபாத் அணியை சந்தித்தது.

நாணய சுழற்சியில் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் வார்னர், களத்தடுப்பை தேர்வு செய்தார். பெங்களூரு அணிக்கு அறிமுக துவக்க வீரர் தேவ்தத் படிக்கல் 42 பந்தில் 56 ரன் எடுத்து கைகொடுத்தார். பின்ச் 29, கோஹ்லி 14 ரன் எடுத்தனர். டிவிலியர்ஸ் 51 ரன்கள், துபே 7 ரன்கள் எடுத்தனர். பெங்களூரு அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்தது. பிலிப் (1) அவுட்டாகாமல் இருந்தார்.
அடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணிக்கு வார்னர், பேர்ஸ்டோவ் ஜோடி துவக்கம் கொடுத்தது. வார்னர் 6 ரன் எடுத்தார். மணிஷ் பாண்டே (34) ஆறுதல் தர, பேர்ஸ்டோவ் ஐ.பி.எல்., அரங்கில் 3வது அரைசதம் எட்டினார்
சகால் தனது 4வது ஓவரில் பேர்ஸ்டோவ் (61), விஜய் சங்கரை (0) அடுத்தடுத்த பந்துகளில் அவுட்டாக்க, போட்டி பெங்களூருவுக்கு சாதகமாக திரும்பியது. பிரியம் கார்க் (12), அபிஷேக் (7), புவனேஷ்வர் (0) விரைவில் திரும்பினர். கடைசியில் சந்தீப் (9) அவுட்டாக, ஐதராபாத் அணி 19.4 ஓவரில் 153 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பெங்களூரு அணி 10 ஓட்டங்கள்் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடராஜன் (3) அவுட்டாகாமல் இருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.