3 நாள் பயணமாக இன்று தமிழகம் வரும் பிரதமர் மோடி… சென்னையில் போக்குவரத்து மாற்றம்

3 நாள் பயணமாக இன்று தமிழ்நாடு வருகை தரும் பிரதமர் மோடி, சென்னையில் கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைக்கிறார். பிரதமர் வருகையையொட்டி, சென்னையில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தேசிய அளவிலான கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள், முதன் முறையாக, தமிழ்நாட்டில் நடைபெற உள்ளன. இதனை தொடங்கி வைக்கக் கோரி, பிரதமருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அழைப்பு விடுத்திருந்தார். இதனை ஏற்று 3 நாள் பயணமாக இன்று தமிழ்நாடு வருகை தரும் பிரதமர் மோடி, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார்.

அதன்படி, மாலை 4 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்படும் பிரதமர் மோடி, 4.50 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். மாலை 5.15 மணிக்கு ஹெலிகாப்டரில் ஐஎன்எஸ் அடையாறு படைதளம் செல்லும் அவர், அங்கிருந்து கேலோ இந்தியா தொடக்க நிகழ்ச்சி நடைபெறும் நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு காரில் செல்கிறார்.

கேலோ இந்தியா நிகழ்ச்சியை தொடங்கி வைத்த பிறகு, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பிரதமர் ஓய்வெடுக்கிறார். நாளை காலை 9 மணிக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து சாலை மார்கமாக விமான நிலையம் செல்லும் பிரதமர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் 11 மணி அளவில் திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலை அடைகிறார். காலை 11 மணி முதல் மதியம் 12.40 மணி வரை ஸ்ரீரங்கம் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்கிறார். அப்போது அங்கு, கம்பராமாயண பாராயணத்தை பிரதமர் கேட்கிறார்.

இதனை தொடர்ந்து, ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் புறப்படும் பிரதமர், மதியம் 2 மணிக்கு ராமநாதசாமி கோயிலை சென்றடையவுள்ளார். மதியம் 2.45 முதல் 3.30 மணி வரை ராமநாதசாமி கோயிலில் பிரதமர் சாமி தரிசனம் செய்கிறார். அன்றைய தினம் ராமேஸ்வரத்திலேயே தங்கும் பிரதமர், மறுநாளான 21ஆம் தேதி காலை, மீண்டும் ராமநாதசாமி கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார்.

அங்கிருந்து சாலை மார்க்கமாக தனுஷ்கோடி அரிச்சல் முனை மற்றும் கோதண்டராமசாமி கோயிலுக்கும் பிரதமர் மோடி செல்கிறார். கோதண்டராமசாமி கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு, சுமார் 11 மணி அளவில் விமானம் மூலம் மதுரை செல்லும் பிரதமர், அங்கிருந்து டெல்லி புறப்படுகிறார்.

விளம்பரம்

இதனிடையே, ஆளுநர் மாளிகையில் எல்.முருகன், அண்ணாமலை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகளை பிரதமர் மோடி சந்தித்துப் பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல், கூட்டணி வியூகம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, நேரு விளையாட்டரங்கம் செல்லும் பிரதமருக்கு, சிவானந்தா சாலையில் பா.ஜ.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையில் அதிகாரிகள், காவலர்கள் என 22 ஆயிரம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். மேலும், சென்னை, திருச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட ஊர்களில் பிரதமர் மோடி செல்லும் இடங்களில் ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரத்தில் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் ராமநாதசுவாமி கோயிலைச் சுற்றி உள்ள வீடுகளிலும் மோப்பநாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

மேலும், சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அண்ணா ஆர்ச் முதல் முத்துசாமி சாலை சந்திப்பு வரை இருபுறமும் வணிக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐஎன்எஸ் அடையாறு முதல் நேரு விளையாட்டரங்கம் வரையும், அங்கிருந்து கிண்டி ராஜ்பவன் வரையும் மதியம் 3 மணி முதல் 8 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், பெரியார் ஈவெரா நெடுஞ்சாலை, தாசபிரகாஷ் சாலை, அண்ணா சாலை, எஸ்.வி.பட்டேல் சாலைகளில் பயணத்தை தவிர்க்க வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.