DAN NEWS மேல்மாகாண இரு மொழித் தொலைக்காட்சி சேவை

டான் செய்திகள் இரு மொழித் தொலைக்காட்சி சேவையின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (27.01.2024) காலை 10.00 மணிக்கு கொழும்பு BMICH மண்டபத்தில் நடைபெற்றது.

யுஎச்எவ்-22இல் டான் செய்திகள் அலைவரிசையை டான் குழுமத் தலைவர் எஸ்.எஸ்.குகநாதனுடன் இணைந்து, நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்கஷ, நாடாளுமன்ற உறுப்பினர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க, எரான் விக்கிரமரட்ன, சரித்த கேரத், பிரதிப் பொலிஸ்மா அதிபர், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ, ஜனாதிபதியின் தொழிற்சங்க பிரதானி சமன் ரட்னபிரிய, ஜனாதிபதியின் ஊடக பிரதானி தனுஸ்க ராமநாயக்க, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ருக்ஷான் பலன, மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் நிரஞ்சன குணவர்த்தன , சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், டான் தொலைக்காட்சி பணியாளர்கள், வர்த்தக அனுசரணையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

டான் செய்திகள் (DAN NEWS) இரு மொழித் தொலைக்காட்சி சேவையினை மேல்மாகாணம் எங்கும் UHF-22 அலைவரிசையில் பார்வையிடலாம்.

More News

குழப்பங்களுக்கு மத்தியில் தமிழரசின் பொதுச்செயலாளராக குகதாசன் நியமனம்! – தேசிய மாநாட்டைத் திடீரென ஒத்திவைத்தார் மாவை.

‘இறப்பு’ தொடர்பாக சமூக ஊடகங்களில் சனத் நிஷாந்தவின் சாரதியின் குறிப்பு : தொலைபேசி இரகசிய பொலிஸாரிடம்..

இந்திய மாணவா்களுக்கு ஏன் அரசியல் அவசியம்? ராகுல் காந்தி கருத்து

Leave A Reply

Your email address will not be published.