2002 கிராம உத்தியோகத்தர் வெற்றிடங்களுக்கான முடிவுகள் வெளியானது : தகுதியானவர்களது பெயர்கள் ….

வெற்றிடமாக உள்ள கிராம உத்தியோகத்தர் பதவிகளுக்கு பரீட்சை திணைக்களத்தினால் வழங்கப்பட்ட பிரதேச செயலகப் பிரிவுகளின் பிரகாரம் நேர்முகத் தேர்வுக்கு தகுதியானவர்களது 4232 பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த அறிவித்துள்ளார்.

உள்நாட்டலுவல்கள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான
www.moha.gov.lk இல் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்தப் பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம் 2002 கிராம உத்தியோகத்தர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு நடத்தப்பட்டு வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் கூடிய விரைவில் நேர்முகத் தேர்வுகள் நடத்தப்படும் என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த மேலும் தெரிவித்தார்.

தேர்வுத் துறை கிராம அலுவலர் தேர்வை டிசம்பர் 02, 2023 அன்று நடத்தியது.

Leave A Reply

Your email address will not be published.