வாஷிங்டனில் உள்ள வீடொன்றின் கேரேஜில் செயலிழக்கச் செய்யப்பட்ட பழைய அணு ஆயுத ஏவுகணை.

அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள வீடொன்றின் கேரேஜில் செயலிழக்கச் செய்யப்பட்ட பழைய அணு ஆயுத ஏவுகணை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி பொலிஸார் அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உள்ளூர்வாசி ஒருவர் ஓஹியோ இராணுவ அருங்காட்சியகத்திற்கு தனது கேரேஜில் சேமித்து வைக்கப்பட்டிருந்த செயலிழக்கச் செய்யப்பட்ட பழைய அணு ஏவுகணையை நன்கொடையாக வழங்க விரும்புவதாக தெரிவித்ததை அடுத்து இது கண்டுபிடிக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பொலிசார் வெடிகுண்டு செயலிழக்கும் குழுவை அந்த நபரின் வீட்டிற்கு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

இது அணுவாயுத ஏவுகணை ஒன்றின் எரிவாயு தாங்கி என தெரிவித்துள்ள பொலிஸ் திணைக்களம், இந்த சம்பவம் பாரதூரமான ஒன்றல்ல எனவும் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.