‘கருணை கொலைக்கு தயார்’ என போஸ்டர் ஒட்டிய வயதான தம்பதி – என்ன நடந்தது..?

‘கருணை கொலைக்கு தயார்’ என வயதான தம்பதியினர் போஸ்டர் ஒட்டிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

கேரளா மாநிலம் அடிமாலி அருகே மலை கிராமத்தில் வசிக்கும் வயதான தம்பதி சிவதாசன் மற்றும் ஓமனா. இவர்களுக்கு கடந்த 5 மாதங்களாக முதியோர் பென்ஷன் வழங்கவில்லை என கூறப்படுகிறது.

மேலும், மருத்துவம் உள்பட அத்தியாவசிய செலவை சமாளிக்க முடியாமல் போயுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட அந்த தம்பதி ‘கருணை கொலைக்கு தயார்’ என போஸ்டர் ஒட்டியுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் அதிகளவில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் பல்வேறு துறையினருக்கு மாத ஊதியம் காலதாமதமாகவே வழங்கப்படுகிறது. மேலும், விதவை, முதியோர் உள்பட அனைத்து பென்ஷன்கள் கடந்த 5 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர், அடிமாலி அருகே மரியகுட்டி (87) என்ற மூதாட்டி மண்சட்டி ஏந்தி யாசகம் பெற்ற சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலதிக செய்திகள்

புத்தளத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுப் படுகொலை!

நீர்கொழும்பிலும் ஒருவர் சுட்டுக்கொலை!

வெற்றியை தேடும் பணியில் புதிய முயற்சி.. சைதை துரைசாமி டி.என்.ஏ-வை கேட்கும் காவல்துறை!

Leave A Reply

Your email address will not be published.