அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி.

அமெரிக்காவின் கன்சாஸ் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 21 பேர் காயமடைந்துள்ளனர்.

அந்நகரில் நடைபெற்ற சூப்பர் பவுல் பேரணியின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் 17 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் என்று கூறப்படுகிறது.

சம்பவத்திற்குப் பிறகு மூன்று பேர் கைது செய்யப்பட்டதாகவும், ஆனால் துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் சூழ்நிலைகள் இன்னும் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், இது பயங்கரவாதச் செயல் அல்ல என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.