3 சிறுமிகளை பாலியல் இச்சைக்கு தூண்ட முயன்ற காமுக ஆசிரியர் கைது

ஹட்டன்: வட்டவளை பிரதேசத்தில் உள்ள தமிழ் பாடசாலை ஒன்றின் விஞ்ஞான ஆசிரியர் ஒருவர், 3பாடசாலை மாணவிகளை பாலியல் வன்கொடுமைக்கு தூண்ட முயன்றதாக கிடைத்த முறைப்பாட்டின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின் , ​​இன்று (15) வட்டவளை பொலிஸார் ஆசிரியரைக் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் 3 பாடசாலை மாணவிகளை உடலுறவு கொள்ள தூண்டும் நோக்கில் குறுஞ்செய்திகளை அனுப்பியமை நிரூபணமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இருப்பினும், மாணவிகள் அவரை உடனடி செய்தி நெட்வொர்க்கில் இருந்து அகற்றிய போது, ​​​​ஆசிரியர் மாணவிகளை மயக்குவதற்காக, அவர்களின் நாற்காலிகளில் இச்சைகளை தூண்டும் வசனங்களை எழுதியுள்ளார்.

44 வயதான இந்த விஞ்ஞான ஆசிரியர் இரண்டு பிள்ளைகளின் தந்தை என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பொலிஸார் , அவரை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

வட்டவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சந்தன கமகே தலைமையில் பொலிஸ் குழுவொன்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.