புறநகர் ரயில்கள் ரத்து: கூடுதல் பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் இயக்கம்!

கோடம்பாக்கம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையங்கள் இடையே தெற்கு ரயில்வே சாா்பில் இன்று (பிப்.25) பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இதனால் பகல் நேரத்தில் இயக்கப்படும் 44 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதனால் அந்த வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காக காலை 10 முதல் பிற்பகல் 3.15 மணி வரை தாம்பரம், கிண்டி, தியாகராய நகா், சென்ட்ரல், பிராட்வே-க்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 150 மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு:

சென்னை மெட்ரோ ரயில் நீல மற்றும் பச்சை வழித்தடங்களில் நண்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை வழக்கமாக இயக்கப்படும் மெட்ரோ ரயில்களுக்கு மாற்றாக காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை 7 நிமிட இடைவேளையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

காலை 5 மணி முதல் 10 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் இரவு 11 மணி வரை, வழக்கமான ஞாயிறு அட்டவணையின்படி ஒவ்வொரு 10 நிமிட இடைவேளையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை ஒவ்வொரு 15 நிமிட இடைவேளையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அட்டவணை மாற்றம் இன்று (பிப். 25) ஒரு நாள் மட்டுமே பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக செய்திகள்

திருப்பூர் இஎஸ்ஐ மருத்துவமனையை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

Leave A Reply

Your email address will not be published.