நுவரெலியாவில் இன்று குதிரை ஓட்டப் போட்டி!

இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கில் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் ஆலோசனைக்கமைய ‘ரோயல் டேப்’ கிளப்பால் நுவரெலியாவில் குதிரை ஓட்டப் போட்டி இன்று நடத்தப்பட்டது.

நுவரெலியா குதிரைப் பந்தய திடலில் இடம்பெற்ற இந்த ஓட்டப் போட்டியில் நான்கு சுற்றுப் போட்டிகள் நடைபெற்றன.

முதலாவது மற்றும் இரண்டாவது சுற்றுப் போட்டிகளில் அசரங்க மற்றும் பிரபா ஜெயரத்தின ஆகிய குதிரை பந்தய உரிமையாளர்களின் சார்பாகப் போட்டியில் பங்குபற்றியிருந்த குதிரை ஓட்ட வீரர் பி.விக்ரமன் என்பவர் வெற்றி பெற்றார்.

அதேநேரத்தில் இடம்பெற்ற மூன்றாவது மற்றும் நான்காவது சுற்று குதிரை ஓட்டப் போட்டியில் எல்.ரவிக்குமார் மற்றும் பி. எஸ் கவிராஜ் ஆகியோர் வெற்றி பெற்றிருந்தார்கள்.

இவ்விரு போட்டியாளர்களும் திரு. திருமதி எட்வர்ட் என்பவரின் குதிரைப் பந்தயத்தின் உரிமையாளர் சார்பாகப் போட்டியில் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டி நிகழ்வில் வெளிநாட்டுப் பயணிகள் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டதுடன், பல முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.