முட்டைக்கும் விரைவில் கட்டுப்பாட்டு விலை!

சாதாரண விலையை விடவும் அதிக விலைக்கு முட்டை விற்கப்படுவதால் விரைவில் கட்டுப்பாட்டு விலை அமுல்படுத்தப்படும் என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இந்த அதிகபட்ச சில்லறை விலை அடுத்த வாரம் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்குச் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

50 ரூபாவுக்கும் குறைவாக முட்டையை விற்பனை செய்ய முடியும் என்ற போதிலும் 60 ரூபா வரை சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றது என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.