மொட்டுவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமலா? – இன்னமும் முடிவில்லை என்கிறார் காமினி லொக்குகே.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்குவது தொடர்பில் கட்சி இன்னும் எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என்று அக்கட்சியின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினரான காமினி லொக்குகே தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி இன்னும் முடிவெடுக்கவில்லை. அதேபோல் நாமல் ராஜபக்ஷவை வேட்பாளராகப் போட்டியிட வைப்பது பற்றியும் தீர்மானம் எடுக்கப்படவில்லை. எனினும், நாமல் ராஜபக்ஷவின் பங்களிப்புடன் கட்சியைக் கட்டியெழுப்பும் பணி இடம்பெறுகின்றது.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கட்சி மட்டத்தில் கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது. எனவே, உரிய நேரத்தில் முடிவெடுக்கப்படும்.

அதேவேளை, சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின்போது அவரைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்றார்.

மேலதிக செய்திகள்

இலங்கை விமானப்படையின் 73வது ஆண்டு நிறைவு விழா இன்று கொண்டாடப்படுகிறது.

நீண்ட இழுபறியின் பின்னர் சாந்தனின் பூதவுடல் உறவுகளிடம் கையளிப்பு!

முல்லைத்தீவில் மோட்டார் சைக்கிள்கள் எதிர் எதிரே மோதியதில் ஒருவர் மரணம் – இருவர் படுகாயம்.

மைத்திரியின் புதிய கூட்டணி அடுத்த வாரம் ஆரம்பம்!

சமன் ரத்நாயக்கவுக்கு 14 ஆம் திகதி வரை விளக்கமறியல்!

முட்டைக்கும் விரைவில் கட்டுப்பாட்டு விலை!

சாதி, மதம், மொழி அடிப்படையில் வாக்கு சேகரிக்க கூடாது… அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

சிவராத்திரி பூஜை தொடர்பில் நீதிமன்றை நாடும் வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய நிர்வாகம்.

மரண விசாரணை, பிரேத பரிசோதனையால் சாந்தனின் பூதவுடல் யாழ். வருவது தாமதம் – இறுதிக்கிரியை தொடர்பில் இன்னும் முடிவில்லை.

3 யாழ். தீவுகளுக்கு மின்சாரம் வழங்க இந்தியாவிடமிருந்து , 10.995 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.

கேரள மாணவர் மரணம்: பல்கலைக்கழக துணைவேந்தர் பணியிடை நீக்கம்

சாதி, மதம், மொழி அடிப்படையில் வாக்கு சேகரிக்க கூடாது… அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

சமையல் எரிவாயு கசிந்து தீ விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் பலி

Leave A Reply

Your email address will not be published.