கட்சிக்கு முரணாக செயல்படும் உறுப்பினர்களுக்கு எதிராக தொடர்ந்தும் ஒழுக்காற்று நடவடிக்கை – அகில விராஜ் காரியவசம்

ஐக்கிய தேசிய கட்சிக்கு முரணாக செயல்படும் உறுப்பினர்களுக்கு எதிராக தொடர்ந்தும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென ஐக்கிய தேசிய கட்சி பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

குருநாகலில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஏற்கனவே 99 உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், கட்சிக்கு எதிராக ஊடாக மாநாடுகளை நடத்திய பிரதேச சபை உறுப்பினர்களுக்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொதுச்செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கட்சியில் இருக்கும் போது கட்சியின் தலைமைத்துவத்தை கைப்பற்ற முடியாதவர்கள் வெளியேறிய பின்னர் எவ்வாறு தலைமைத்துவத்தினை கைப்பற்றுவார்கள் என்றும் அகில விராஜ் காரியவசம் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன் ஐக்கிய தேசிய கட்சியின் சின்னத்தையும், கட்சியையும் ஏலம் விட்டவர்களுக்கு கட்சி சொந்தமில்லையெனவும் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் இதன் போது தெரிவித்துள்ளார்.

Comments are closed.