“மொபைல்களை உடைத்து நொறுக்குவோம்,” : – சீனப் பள்ளியின் எச்சரிக்கை (அடித்து நொறுக்கும் காணொளி)

சீனாவில் உள்ள பள்ளி ஒன்றின் ஊழியர் ஒருவர் கைத்தொலைபேசிகளை மாணவர்கள் முன்னிலையில் அடித்து நொறுக்கும் காணொளி பல்வேறு விதமான வாதங்களை எழுப்பியுள்ளது.

மத்திய சீனாவின் ஹுனான் (Hunan) மாநிலத்தில் உள்ள பள்ளி ஒன்றில் சம்பவம் நடந்தது.

பள்ளியில் காலை ஒன்றுகூடலின்போது ஆசிரியர் மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுப்பது SCMP வெளியிட்டுள்ள காணொளியில் தெரிகிறது.

அவர் பள்ளி விதிமுறைகளை விவரிக்கிறார்.

“கைத்தொலைபேசியை வைத்துக்கொண்டு எங்களிடம் சிக்காமல் இருக்கமுடியாது. அதை நாங்கள் உடைத்து நொறுக்கித் தண்ணீரில் வீசுவோம்,” என்று அவர் கண்டிப்புடன் கூறுகிறார்.

பள்ளியிடம் விசாரித்தபோது, அவை பழுதான கைத்தொலைபேசிகள் என்றும் பிள்ளைகளை எச்சரிக்க பெற்றோர் சம்மதத்துடன் அவர்கள் முன்னிலையில் அவை உடைத்து நொறுக்கப்பட்டதாகவும் அது சொன்னது.

சம்பவம் சீனாவில் சர்ச்சையைக் கிளப்பியிருப்பதாக SCMP கூறியது.

சிலர் இது நல்ல முடிவு, பிள்ளைகள் பள்ளியில் கவனம் செலுத்த இத்தகைய முயற்சிகள் அவசியம் என்று கூறியுள்ளனர்.

வேறு சிலர், இது பிள்ளைகளை மனத்தளவில் பாதிக்கும், சொல்லிப் புரியவைக்காமல் இத்தகைய முரட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வது சரியல்ல என்று சாடியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.