கேரளத்தில் 75 நாள்களில் 6,744 பேருக்கு அம்மை நோய் பாதிப்பு, 9 பேர் பலி

கேரளத்தில் 75 நாள்களில் அம்மை நோய்க்கு 9 பேர் பலியாகியுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கேரளத்தில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அங்கு அம்மை நோய் பாதிப்புகள் கடந்த சில நாள்களாக அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த 75 நாள்களில் மட்டும் இந்த நோய்க்கு குழந்தைகள் உட்பட 6,744 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 9 பேர் பலியாகியுள்ளனர். கடந்த ஆண்டு மட்டும் மாநிலத்தில் 26,363 பேருக்கு அம்மை நோய் கண்டறியப்பட்டதாகவும் அதில், நான்கு பேர் பலியானதாகவும் அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. வெப்பநிலை அதிகரிப்பதால், நோய் தாக்கும் வாய்ப்புகள் அதிகம்.

தொற்று பாதிப்புக்குள்ளான ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு இந்நோய் பரவுகிறது. மேலும் இந்த வைரஸ் காற்றின் மூலமாகவும் பரவுகிறது என்று கேரளத்தின் இந்திய மருத்துவ சங்கத்தின் ஆராய்ச்சிப் பிரிவின் தலைவர் டாக்டர் ராஜீவ் ஜெயதேவன் கூறினார்.

மேலதிக செய்திகள்

அந்தியேட்டி, வீட்டுக் கிருத்திய அழைப்பிதழ்

யாழில் குடும்பப் பெண் அடித்துப் படுகொலை! – மதுபோதையில் கணவன் வெறியாட்டம்.

வவுனியாவில் ரயில் மோதி குடும்பஸ்தர் ஒருவர் மரணம்.

Leave A Reply

Your email address will not be published.