ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கத் தயார்; ரஷ்ய ஜனாதிபதி போல் எனக்கும் அதிஷ்டம் – இப்படிக் கூறுகின்றார் குமார வெல்கம.

ரஷ்ய ஜனாதிபதி புடின் போல் எனக்கும் அதிஷ்டம் வருகின்றது. எனது ஜாதக நிலையும் நல்லதாகவே உள்ளது. ஆக அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கத் தயாராகவே இருக்கின்றேன்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்க வேண்டாம் எனக் கூறினேன். ஆனால், மக்கள் வாக்களித்தனர். இறுதியில் என்ன நடந்தது? நான் கூறியதுபோல் நாட்டுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. எனவே, எமது கருத்துக்களையும் மக்கள் செவிமடுக்க வேண்டும்.

எனக்குக் கட்சி இருக்கின்றது, சிறந்த தலைவராக நான் உள்ளேன். அதுமட்டுமல்ல ஜாதக நிலையும் நல்லதாகவே உள்ளது. ரஷ்ய ஜனாதிபதி புடின் போல் எனக்கும் அதிஷ்டம் தென்படுகின்றது. ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவதற்கான அனைத்து தகுதியும் எனக்கு இருக்கின்றது. எனக்கு இல்லாத தகைமை என்ன?” – என்று அவர் கேள்வி எழுப்பினார்.

Leave A Reply

Your email address will not be published.