கோட்டாவே குற்றவாளி! – தயான் பதிலடி.

ஜனாதிபதிப் பதவியிலிருந்து தான் துரத்தப்பட்டமைக்குத் தமிழர்களும், முஸ்லிம்களும் அரகலய போராட்டத்தில் பங்கேற்றமையே காரணம் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது நூலில் குற்றஞ்சாட்டியுள்ளமைக்கு அவரைத் தேர்தலில் களமிறக்குவதற்காகப் பாடுபட்ட கலாநிதி தயான் ஜயதிலக கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆங்கில ஊடகம் ஒன்றில் தயான் ஜயதிலக எழுதியுள்ள விமர்சனத்தில், அரகலய போராட்டத்தில் பங்கேற்றவர்கள் சிங்கள – பௌத்த கிராமப்புற விவசாயிகளின் பிள்ளைகள். கோட்டாவின் திட்டங்கள் காரணமாக கிராமப்புறங்களிலிருந்த படையினரின் குடும்பங்களும் உறவினர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தனர். கோட்டாவே குற்றவாளி. எனவே, கோட்டாவை யாரும் வெளியேற்றவில்லை. ஆயுதமற்ற மக்கள் சக்தியின் மூலமே அவர் வெளியேற்றப்பட்டார்.” – என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.