முன்னாள் காற்பந்து நட்சத்திரம் ரோபின்யோ கைது?

பிரேசிலின் முன்னாள் காற்பந்து நட்சத்திரம் ரோபின்யோ (Robinho) சாந்த்தோஸ் (Santos) நகரில் முன்னாள் காற்பந்து நட்சத்திரம் ரோபின்யோ கைதுசெய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பெண் ஒருவரைப் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் அவருக்கு ஏற்கெனவே 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அதனை எதிர்த்து ரோபின்யோ உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

அந்த மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டது. உள்ளூர் நீதிமன்றம் அவருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை நிலைநிறுத்தியது.

அவர் மீது இத்தாலியில் குற்றஞ்சாட்டப்பட்டது; ஆனால் அவர் பிரேசிலில் உள்ள சிறையில் தண்டனைக்காலத்தைக் கழிக்கவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

Leave A Reply

Your email address will not be published.