ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு ஆதரவு வழங்க , ‘அம்மான் படை’ அமைக்கும் கருணா !

முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் ஏனையவர்களை உள்ளடக்கி ‘அம்மான் படை’ என்ற புதிய அமைப்பை உருவாக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

தமிழ் ஐக்கிய சுதந்திர முன்னணியின் (TUFF) தலைவரும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதியுமான விநாயகமூர்த்தி முரளிதரன், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முரளிதரன், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியை விமர்சித்ததுடன், அந்த காலப்பகுதியில் நாடு பின்னடைவை சந்தித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

நாட்டை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்ல ரணில் விக்ரமசிங்க மேற்கொண்ட முயற்சிகளை அங்கீகரித்த அவர், தற்போதைய தலைமைத்துவத்தின் கீழ் நாடு உயர்த்தப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் அரசியல் விவகாரங்களில் கூட்டு அணுகுமுறையை சுட்டிக்காட்டிய முரளிதரன், ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடிவு செய்தால், விக்கிரமசிங்கவை ஆதரிக்க தனது கட்சி தயாராக இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

குறிப்பாக முன்னாள் போராளிகளுக்கு உதவிகளை வழங்குவதற்காக ‘அம்மான் படை’ என்ற பெயரில் புதிதாக உருவாக்கப்பட்ட அமைப்பை முரளிதரன் அறிமுகப்படுத்தியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.