தமிழ் பொதுவேட்பாளர் யோசனை: அடியோடு நிராகரித்தார் சம்பந்தன்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்க வேண்டும் என்ற யோசனையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவருமான இரா.சம்பந்தன் எம்.பி. அடியோடு நிராகரித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்க வேண்டும் என்ற முன்மொழிவுக்குத் தமிழ் மக்களிடத்தில் ஆதரவு கிடையாது.

இந்த முயற்சியானது தமிழ் மக்களுக்கான சாதகமான நிலைமைகளை உருவாக்காது.” – என்றார்.

எனினும், தமிழ் பொதுவேட்பாளர் விவகாரத்துக்குச் சில தமிழ்த் தேசியக் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. பிரதான கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சி இது தொடர்பில் எதிரான நிலைப்பாட்டிலேயே உள்ளது. சம்பந்தனின் நிலைப்பாடும் இதனையே பிரதிபலிக்கின்றது.

தமிழ் பொதுவேட்பாளரைக் களமிறக்கித் தமிழர்களின் வாக்குகளைச் சிதறடிக்க முயலாதீர்கள்! – தமிழ்க் கட்சிகளிடம் ரணிலின் சகா வேண்டுகோள்.

வாக்கு சேகரித்த முதல்வரிடம் கேள்வி எழுப்பிய பெண்: ஈரோட்டில் பரபரப்பு..!

தேர்தல் விதிமீறல் : ஓ.பன்னீர்செல்வம், அண்ணாமலை மீது வழக்குப்பதிவு

கேஜரிவால் கைதைக் கண்டித்து தில்லியில் ‘இந்தியா’ கூட்டணி இன்று போராட்டம்

கிரிப்டோகரன்சி கிங் , பண மோசடிக்காக இருபத்தைந்து ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்

மின்சாரம் தாக்கி முதியவர் பரிதாப மரணம்!

Leave A Reply

Your email address will not be published.