சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.

கோல்கட்டாவுக்கு எதிரானஐ.பி.எல்., லீக் போட்டியில்கேப்டன் ருதுராஜ், ஜடேஜாவின் ஆட்டம் கைகொடுக்க சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியாவில் ஐ.பி.எல்., 17வது சீசன் நடக்கிறது. சென்னையில் நடந்த லீக் போட்டியில் ‘நடப்பு சாம்பியன்’ சென்னை, கோல்கட்டா அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற சென்னை அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.

கோல்கட்டா அணிக்கு பில் சால்ட் (0)ஏமாற்றினார். அடுத்து வந்த சுனில் நரைன், தேஷ்பாண்டே வீசிய 3வது ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாச 19 ரன் கிடைத்தன.இரண்டாவது விக்கெட்டுக்கு 56 ரன் சேர்த்த போது ஜடேஜா ‘சுழலில்’ ரகுவன்ஷி (24) சிக்கினார். தொடர்ந்து அசத்திய ஜடேஜா பந்தில் நரைன் (27),வெங்கடேஷ் (2)அவுட்டாகினர்.ராமன்தீப்சிங்(13), ரிங்கு சிங் (9),ரசல் (10)சோபிக்கவில்லை. நிதானமாக ஆடிய கேப்டன் ஸ்ரேயாஸ் (34) ஆறுதல் தந்தார்.கோல்கட்டா அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 137 ரன் எடுத்தது. அனுகுல் ராய் (3), வைபவ் அரோரா (1) அவுட்டாகாமல் இருந்தனர். சென்னை சார்பில் ஜடேஜா, தேஷ்பாண்டே தலா 3 விக்கெட் சாய்த்தனர்.

சுலப இலக்கை விரட்டிய சென்னை அணிக்கு ரச்சின் ரவிந்திரா (15) நிலைக்கவில்லை. அனுகுல் ராய் வீசிய 5வது ஓவரில் 3 பவுண்டரி விளாசிய ருதுராஜ், வைபவ் வீசிய 6வது ஓவரில் 2 பவுண்டரி அடித்தார். மறுமுனையில் அசத்திய டேரில் மிட்செல், நரைன் வீசிய 7வது ஓவரில் வரிசையாக ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி விளாசினார்.

ரசல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ருதுராஜ், 45 பந்தில் அரைசதம் எட்டினார். இரண்டாவது விக்கெட்டுக்கு 70 ரன் சேர்த்த போது நரைன் பந்தில் மிட்செல் (25) போல்டானார். வருண் சக்கரவர்த்தி வீசிய 16வது ஓவரில் வரிசையாக 2 சிக்சர் பறக்கவிட்ட ஷிவம் துபே (28) நம்பிக்கை தந்தார். அனுகுல் ராய் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ருதுராஜ் வெற்றியை உறுதி செய்தார்.

சென்னை அணி 17.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 141 ரன் எடுத்து வெற்றிப் பாதைக்கு திரும்பியது. ருதுராஜ் (67), தோனி (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஐ.பி.எல்., வரலாற்றில் ஆட்டத்தின் முதல் பந்தில் அவுட்டான 5வது கோல்கட்டா வீரரானார் பில் சால்ட். ஏற்கனவே பிரண்டன் மெக்கலம் (எதிர்: பெங்களூரு, 2009), மனோஜ் திவாரி (எதிர்: டெக்கான், 2010), காலிஸ் (எதிர்: டில்லி, 2014), டென்லி (எதிர்: டில்லி, 2019) இப்படி அவுட்டாகினர்.

ஐ.பி.எல்., அரங்கில் 100 ‘கேட்ச்’ செய்த 5வது வீரரானார் ரவிந்திர ஜடேஜா. ஏற்கனவே கோலி (110 ‘கேட்ச்’), ரெய்னா (109), போலார்டு (103), ரோகித் சர்மா (100) ‘பீல்டிங்கில்’ அசத்தினர்.

Leave A Reply

Your email address will not be published.