2500 ஆங்கில ஆசிரியர்கள் நியமனம்… 6500 ஆக அதிகரிக்க அமைச்சரவை ஒப்புதல்.

அனைவருக்கும் ஆங்கிலம் வேலைத்திட்டத்தின் கீழ் 2500 ஆங்கில ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்தக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், க.பொ.த. சாதாரண தர (GCE) பாடங்களை ஆங்கிலத்தில் கற்பிப்பதற்காக, 4,441 ஆங்கில ஆசிரியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதற்கு 6500 ஆங்கில ஆசிரியர்கள் தேவை.

ஆங்கிலத்தில் பாடங்களை நடத்தும் பள்ளிகளின் எண்ணிக்கை 765 ஆகும். இந்த ஆண்டு பள்ளிகளின் எண்ணிக்கையை 1000 ஆக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.

அந்த இலக்கை அடையும் வகையில் ஆங்கில ஆசிரியர்களின் எண்ணிக்கையை 6500 ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் குணவர்தன தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.