எஸ்பிபி-யை தொடர்ந்து விஜயகாந்தின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாத சோகம்

உலக புகழ்பெற்ற பாடகர் எஸ் பி பி யின் மரணம் அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் மற்றொரு நடிகருக்கு உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாதது பலருக்கும் சோகத்தை கொடுத்துள்ளது.

தமிழ் சினிமாவில் ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்தவர் விஜயகாந்த். அதுமட்டுமில்லாமல் நடிகர் சங்க தலைவராகவும் இருந்து நடிகர் சங்க கடனை தீர்த்து வைத்தவர்.

அதன்பிறகு தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியை உருவாக்கி அதன் தலைவராக செயல்பட்டு வந்தார். எதிர்க்கட்சி அளவுக்கு வளர்ந்த விஜயகாந்துக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது.

கொஞ்ச நாட்களாகவே விஜயகாந்த் மருத்துவர்கள் ஆலோசனையில்தான் இருந்து வந்த நிலையில் சமீபத்தில் பிரபல மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அங்கு விஜயகாந்துக்கு கொரானா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை எடுத்து வருகிறார்.

இது தெரியாத அவரது கட்சிக்காரர்கள் விஜயகாந்த் முழுவதும் குணமடைந்து விட்டதாக தவறான அறிக்கையை வெளியிட்டனர். ஆனால் மருத்துவமனையிலிருந்து விஜயகாந்த் இன்னும் மருத்துவ சிகிச்சையில் தான் இருக்கிறார் என தகவல் வந்தது.

நாட்கள் ஆக ஆக விஜயகாந்தின் உடல் நிலையில் கொஞ்சம் கூட மாற்றம் இல்லாத நிலையில் கவலையில் குடும்பத்தினர் உள்ளார்களாம். இருந்தாலும் விஜயகாந்துக்கு அவ்வளவு பெரிய பாதிப்பு இல்லை என கூறியதால் ரசிகர்கள் பெருமூச்சு விட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.