மறைந்த பாலித தெவரப்பெருமவின் இறுதிக்கிரியைகள் வெள்ளிக்கிழமை! (New Update)

மறைந்த பாலித தெவரப்பெருமவின் பூதவுடல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மதியம் , அவரே அவருக்காக நிர்மானித்த குடும்ப கல்லறையில் அடக்கம் செய்யப்படவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் பிரதி அமைச்சருமான பாலித தெவரப்பெரும நேற்று (16) காலமானார்.

இறக்கும் போது 64 வயதான தெவரப்பெருமவின் மரணத்திற்கு மின்சாரம் தாக்கியதே காரணம் என அவரது மருமகன் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

தெவரப்பெருமவின் தோட்டத்தில் பாவித்த ஒரு இடத்தில் நிலத்தில் விழுந்திருந்த மின்சார வயர் ஒன்றை மிதித்த போது , ஏற்பட்ட மின்சார தாக்குதலே அவரது மரணத்துக்கு காரணம் என அவரது மருமகன் விபரித்துள்ளார். மரண விசாரணையிலும் அது உறுதியாகியுள்ளது.

1960 ஆம் ஆண்டு பிறந்த பாலித குமார தெவரப்பெரும இலங்கை அரசியலில் பிரபலமானவராக அறியப்பட்டார்.

2002 ஆம் ஆண்டு மத்துகம பிரதேச சபையின் தலைவராக இருந்த பாலித தெவரப்பெரும மேல் மாகாண சபை உறுப்பினராகவும் கடமையாற்றினார்.

2010 முதல் 2020 வரை களுத்தறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினராகவும் உள்நாட்டு அலுவல்கள், வடமேற்கு அபிவிருத்தி மற்றும் கலாச்சார அலுவல்கள் பிரதி அமைச்சராகவும், வனவிலங்கு பிரதி அமைச்சராகவும் பணியாற்றினார்.
2020 நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்ட அவர், மீண்டும் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பு கிடைக்காததால், தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொண்டார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான தபாலித தெவரப்பெரும நேசித்த அவரது மூத்த மகன் சில காலங்களுக்கு முன்னர் டெங்கு நோயால் உயிரிழந்த நிலையில், பாலித்த தெவரப்பெரும உயிருடன் இருந்தபோது, ​​அவருக்குச் சொந்தமான பெரிய தோட்டமொன்றில் உள்ள ஏரிக்கு அருகில் நிசல நிவஹன (அமைதி இல்லம்) எனும் பெயரில் மத்துகம யடதொலவத்தை பிரதேசத்தில் உள்ள அவரது காணியில் கல்லறை ஒன்றை அமைக்கத்திருந்தார். அதே சமயம் அவரது சடலத்தை அடக்கம் செய்ய பணமும் கொடுத்ததாக வாக்குமூலம் ஒன்றை ஊடகம் ஒன்றுக்கு அளித்திருந்தார்.

அவர் இறந்து அவரது பூதவுடலை கொண்டு வரும் போது , எவரும் அழாது , பாடுமாறு ஒரு பாடலும் எழுதியிருந்தார்.

அந்த வரிகள் தமிழில் ….. (மொழி பெயர்ப்பு மாத்திரமே)

பழகிய பாதையில் நானும் போகிறேன்
ஆனால் இது வேறொரு பயணம் மகனே
என் பின்னால் நிறைய பேர் வருவார்கள்
தனிமையில் நான் நடந்த வழியியினிலே

என் எடையை உன் மீது சுமத்தவில்லை மகனே
சுமக்க முடியாத கனமாக இருந்தால் கீழே வைத்துவிடு மகனே
உன் கைகள் வலிக்கலாம்
கீழே வைத்துவிடு மகனே

மலையின் கீழே உள்ள மயானம் பரிச்சயமில்லை மகனே
என்னுடைய துணைக்கு இன்னும் சிலர் இருப்பார்கள்
அவர்கள் யாரென நாளை காலை தெரிந்து கொள்வேன்

நான் இயற்கைக்குக் கீழ்ப்படிகிறேன்
நான் இருட்டில் போய்விடலாம்
நீ கிளம்பும் போது, மருந்து துண்டை
எடுத்துச் செல் , அது உன் தாயுடையது மகனே.

පුරුදු පාරෙම… අදත් යනවා…
ඒත් වෙන.. ගමනක් පුතේ…
හුඟක් අය මගෙ… පස්සෙ.. එනවා…
තනිව ආ.. ගිය මගේ…

කවමදාවත්.. මගේ.. බර උඹේ…
කරේ තිබ්බේ.. නෑ.. පුතේ….
හුඟක් බර නම්… බිමින් තියපන්…
රිදෙනවා.. ඇති අත් උඹේ…
හුඟක් බර නම්… බිමින් තියපන්…
රිදෙනවා.. ඇති අත් උඹේ…

කන්ද පාමුල.. සොහොන හුරු නෑ…
දන්නවා මං.. මයෙ පුතේ…
මගේ තනියට.. තවත් අය.. ඇති…
අඳුරගන්නම්… හෙට උදේ…

සොබාදහමට… අවනතයි මං…
ඉතින් යන්නම්.. ගොම්මනේ…
යන ගමන් මේ… බේත් තුණ්ඩුව….
අරන් පලයන්… අම්මගේ…
යන ගමන් මේ… බේත් තුණ්ඩුව…
අරන් පලයන්…
අම්ම්ම්මගේ……

Going on the way that used to go in the past
But it’s another journey son
A lot of people are coming after me
On the way that used to walk lonely

Didn’t put my weight on your
Shoulder son
Put down if it’s too heavy to carry
Your hands might be paining
Put down if it’s too heavy to carry
Your hands might be paining

The cemetery down the mountain is not familiar
I know that may son
There will be some others to join me
I will get to know them tomorrow morning

I obey the nature
I may leave in the dark
When you are leaving, the prescription
Take it, its your mother’s
When you are leaving, the prescription
Take it, its your mother’s
https://www.tiktok.com/@hirunews/video/7358490693918018833?is_from_webapp=1&sender_device=pc

Leave A Reply

Your email address will not be published.