நல்ல சட்டை கூட இல்லாத அஜித்திற்கு சான்ஸ் வாங்கி கொடுத்த எஸ்பிபி (வீடியோ)

தமிழ் சினிமாவை உலகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு பாராட்டு பெற்றவர் எஸ்பிபி. தனது இனிமையான குரலால் கோடான கோடி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.

நேற்றைய தினம் தமிழ் சினிமாவில் கருப்பு நாளாக பார்க்கப்படுகிறது, அது மட்டுமில்லாமல் பல பிரபலங்கள் எஸ்பிபி-யின் இறுதி அஞ்சலியில் கலந்து கொண்டனர்.

ஆனால் சினிமாவில் எஸ்பிபி-யால் அறிமுகப்படுத்தப்பட்ட அஜித், இறுதி அஞ்சலியில் கலந்து கொள்ளவில்லை என்பது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் தான்.

எஸ்பிபி அஜித்தை பற்றிய ரசிகையத்தை கூறுய வீடியோ வெளிவந்துள்ளது. அந்த வீடியோவில் அஜித் மட்டும் சரண் இருவரும் பள்ளி படிக்கும் போதே நண்பர்கள். ஒரு முறை அஜித் விளம்பரத்தில் நடிப்பதற்காக நல்ல சட்டை கூட இல்லாமல் சரணின் சட்டையை வாங்கி சென்றார்.

அப்போதே அஜித் பார்க்கும் போது ரொம்ப அழகாயிருப்பான், சின்ன வயதிலிருந்தே அஜித்திற்கு பைக் ரேசில் மிகுந்த ஆர்வம் என அந்த பேட்டியில் தெரிவித்திருப்பார்.

அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்க்கும் போது தொடக்க காலத்தில் எவ்வளவு அடிப்பட்டு இவ்வளவு பெரிய இடத்தைப் பிடித்து இருக்கிறார் என்பதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை.

Leave A Reply

Your email address will not be published.