அல்ஜசீரா இஸ்ரேல் அலுவலகத்தில் சோதனை.

அல் ஜசீரா செய்தி நிறுவனத்தின் செயல்பாடுகள் இஸ்ரேலின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்துவதாகக் கூறி சோதனை நடத்தி அந்நாட்டிற்குள்ளான சேவைகளை முடங்கியுள்ளது இஸ்ரேல் அரசு.

காசா மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேல் நடத்தி வரும் மனிதாபிமானமற்ற செயல்பாடுகள் மற்றும் இனப்படுகொலைகளை அல் ஜசீரா நிறு வனம் தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறது. உலக நாடுகள் இஸ்ரேல் அரசுக்கும் ராணு வத்திற்கும் பல கேள்விகளை எழுப்பு வதற்கு இந்த செய்தி நிறுவனத்தின் பணி களும் குறிப்பிட்ட காரணமாக உள்ளது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஜெருசலேமில் அல் ஜசீரா தொலைக் காட்சியின் ஒளிபரப்பு அலுவலகம் செயல்பட்டு வந்த கட்டிடத்தில் இஸ்ரேல் காவல்துறை சோதனை நடத்தியது.

இஸ்ரேலின் தேசிய பாதுகாப்புக்கு அல் ஜசீராவின் செயல்பாடுகள் அச்சுறுத்தல் ஏற்படுத்துவதே காரணம் என இந்த சோதனைக்கு இஸ்ரேல் தரப்பு கூறியதை அபத்தமான பொய் என அல் ஜசீரா நிறுவனம் முற்றிலுமாக நிராகரித்துள்ளது. இஸ்ரேலின் முடக்கத்திற்கு எதிராக எல்லாவிதமான சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கும் எங்களுக்கு உரிமை உள்ளது என்று அந்நிறுவனம் தெரி வித்துள்ளது.

இந்த சோதனையில் அல் ஜசீரா அலுவலகத்தில் இருந்து கேமரா உள்ளிட்ட உபகரணங்களை எடுத்துச் சென்றுள்ளதாக இஸ்ரேலின் தகவல் தொடர்பு அமைச்சர் ஷ்லோமோ கர்ஹி தெரிவித்துள்ளார்.

ஹமாஸின் பிரச்சாரக் கருவியாக அல் ஜசீரா செய்தி நிறுவனம் செயல்படுகிறது என இஸ்ரேல் கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை எனவும் இந்த முடக்க நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டுமென இஸ்ரேல் குடிமை உரிமைகள் சங்கம் இஸ்ரேல் உச்ச நீதி மன்றத்தை நாடியுள்ளதாகக் கூறப் பட்டுள்ளது.

மேலும் அல்ஜசீரா மீது தடை விதிக்கப்பட்டதன் பின்னணியில் அதிக அரசியல் உள்நோக்கம் இருப்பதாக தெரிகிறது. விமர்சனக் குரல்களை ஒடுக்கவே, அரபு ஊடகங்களைக் குறி வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. செய்தி தொலைக்காட்சி சேவைக்கு தடை விதித்ததன் மூலம் இஸ்ரேல் இப்போது சர்வாதிகார அரசாங்கங்களின் பட்டியலில் இணைந்துள்ளது.

இஸ்ரேல் அரசு இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வெளிநாட்டு செய்தி யாளர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. தங்கள் நிறுவனத்தின் மீது விதிக்கப் பட்ட தடைக்கு பதில் கூறிய அல் ஜசீரா நிறுவனம் “பத்திரிகையாளர்களை கொல்வது, கைது செய்வதன் மூலம் தனது குற்றங்களை மறைக்க இஸ்ரேல் முயற்சி செய்கிறது. ஆனாலும் எங்கள் கடமையைச் செய்வதில் இருந்து ஒருபோதும் தவறமாட்டோம்” என்று தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.