திசைகாட்டியும் மணியும் கொள்கை மோதலில் : கிராம நீதிமன்ற பேச்சுக்கு எதிர்ப்பு.

JVP யின் சில தலைவர்கள் பகிரங்கமாக வெளியிடும் கருத்துக்கள் தேசிய NPPக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) சிரேஷ்ட உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தியின் (NPP)தலைமைக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிராமத்திற்கு அதிகார வரம்பு வழங்கப்படும் என்று கே.டி. லால்காந்தவின் மே தின அறிக்கை மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கப்போவதாக சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்த கருத்து தொடர்பில் இந்த முரண்பாடுகள் எழுந்துள்ளன.

அந்த சித்தாந்தங்கள் தேசிய மக்கள் சக்தியின் (NPP)கருத்தை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தியினது கருத்தாக, தனது கட்டுப்பாட்டின் கீழ், சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் அதே வழியில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் கிராமத்திற்கு அதிகார வரம்பு வழங்கப்படாது என்றும் சுட்டிக் காட்டியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.