உலக இருதய நோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம்.

உலக இருதய நோய் தினத்தை முன்னிட்டு இது தொடர்பாக தெளிவுட்டும் விழிப்புணர்வு ஊர்வலம் இன்று(29) காலை கல்முனையில் இடம்பெற்றது.

கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் பணிமனை மற்றும் இதொற்றா நோய்பிரிவு என்பன இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இவ் விழிப்புணர்வு ஊர்வல பேரணியானது கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் டாக்டர் ரஜாப் தலைமையில் நடைபெற்றது.

இவ் விழிப்புணர்வு ஊர்வலமானது கல்முனை பிராந்திய சுகாதார பணிமனை முனன்றில் ஆரம்பித்து பொலிஸ் வீதியினுடாகச் சென்று கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை இ பிரதான வீதி வழியாக கல்முனை பொது சந்தை வரை சென்று மீண்டும் ஆரம்ப இடத்தை வந்தடைந்தது. இதன் போது பொது மக்களுக்கு நோய் தொடர்பான துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.

குறிப்பாக புகைத்தல்,மதுபானம் அருந்துதல்,ஆரோக்கியமான உணவு இன்மை ,முறையான உடற்பயிற்சி இல்லாமல் போன்ற காரணங்களால் இவ் நோய் தாக்கம் ஏற்ப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இப் விழிப்புணர்வு நடவடிக்கையின் தொற்றா நோய் பிரிவு உயர் அதிகாரிகள் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை உத்தியோகத்தர்கள் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.