புள்ளிகள் பட்டியலில் 3ம் இடத்துக்கு முன்னேறிய ஆர்.சி.பி அணி.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 10-ஆவது ஆட்டத்தில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், சூப்பர் ஓவர் முறையில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது.

துபாயில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங்  செய்த பெங்களூர் 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 201 ரன் எடுத்தது. அடுத்து ஆடிய மும்பையும் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் அடிக்க, ஆட்டம் சமன் ஆனது. 

வெற்றியாளரை தீர்மானிக்கும் சூப்பர் ஓவரில் முதலில் ஆடிய மும்பை ஒரு விக்கெட் இழப்புக்கு 7 ரன்கள் எடுக்க, அடுத்து ஆடிய பெங்களூர் விக்கெட் இழப்பின்றி 11 ரன்கள் எடுத்து வென்றது.

இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் 3-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது ஆர்.சி.பி அணி.

புள்ளிகள் பட்டியல்

 அணிகள்  ஆட்டங்கள்   வெற்றி  தோல்வி  புள்ளிகள்  நெட்   ரன்ரேட்
 டில்லி  2  2  0  4  +1.100
 ராஜஸ்தான்  2  2  0  4  +0.615
 பெங்களூர்  3  2  1  4  -1.450
 பஞ்சாப்  3  1  2  2  +1.498
 மும்பை  3  1  2  2  +0.654
 கொல்கத்தா  2  1  1  2  -0.767
 சென்னை  3  1  2  2  -0.840
 ஹைதராபாத்  2  0  2  0  -0.730

 

 

Leave A Reply

Your email address will not be published.