ரணிலை மீண்டும் ஜனாதிபதியாக்க வேண்டும் என்கிறார் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதாகக் கூறி பல ஜனாதிபதிகள் பதவிக்கு வந்தாலும் அவர்கள் எவரும் அது தொடர்பில் உரிய கவனம் செலுத்தவில்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் தெரிவித்தார்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாட்டின் பொறுப்பை ஏற்க பயந்தவர்கள் தற்போது ஜனாதிபதியின் அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கு பயந்து பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருவதாகவும் திலீபன் சுட்டிக்காட்டினார்.

வவுனியா மோஜோ விழா மண்டபத்தில் வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட மக்களுக்கு “உருமய” வேலைத்திட்டத்தின் கீழ் இலவச உறுதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்விலேயே திலீபன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அனைவரும் ஒன்றிணைந்து ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக நியமிக்க வேண்டும் எனவும் திலீபன் வலியுறுத்தியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.