எலோன் மஸ்க்கை , தரக் குறைவாக பேசி விட்டு மன்னிப்பு கேட்ட NPP சுனில் ஹந்துன்நெத்தி

தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி பேசிய வார்த்தை சமூக வலைத்தளங்களில் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு பரிமாறப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கருத்து ஒன்றில், எலோன் மஸ்க் பயல் என அழைக்கப்பட்டதாகவும், அதற்காக தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

எலோன் மஸ்க் உலகின் மிகப்பெரிய பரோபகாரர்களில் ஒருவர் என்றும், அவர் ஒரு பொருளாதார பரோபகாரர் என்றும், `ஹதயா’ என்பது கிராமிய பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் சொல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மக்கள் கட்சியின் வர்த்தக கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

சுனில் ஹந்துன்நெத்தி பேசியது இது ….

“உண்மையில் எலோன் மஸ்க் போன்றவர்கள் மக்கள் ஆதரவு இல்லாத தலைவர்கள் ஆளும் , நிலையற்ற அரசியல் உள்ள ஒரு நாட்டுக்கு வர மாட்டார்கள். அப்படி எவராவது வருவதாக இருந்தால் மாபியா முதலீடுகளுக்கே வருகிறார்கள். ரணில் , எலோன் மஸ்க்குக்கு விற்கப் போவது எதை என சொல்ல வேண்டும். எமது நாட்டை சூறையாட வரும் ஒரு கொள்ளையன் எலோன் மஸ்க்” என பேசிய வீடியோவுக்கு , சுனில் ஹந்துன்நெத்தியை பழைய பஞ்சாங்கம் என ஓருவர் வசைபாடுவதும் அடங்கிய வீடியோ மேலே உள்ள இணைப்பில்  இணைக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.