எனக்கு பயமில்லை.. 13ஐ நிறைவேற்றுவேன்..- சஜித்.

எதிர்காலத்தில் அமைக்கப்படும் SJB அரசாங்கத்தின் கீழ் 13வது திருத்தம் அமுல்படுத்தப்படும் என அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

13வது திருத்தச் சட்டம் குறித்து பேசுவதற்கு பல்வேறு தலைவர்கள் அஞ்சுவதாகவும், ஆனால் அவர்கள் அரசியல் சுயநலவாதிகள் எனவும் கூறிய எதிர்க்கட்சித் தலைவர், நேரிடையாகப் பேசுபவராக இந்தத் திருத்தத்தை தான் அமுல்படுத்தப் போவதாகவும் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் நடைபெற்ற சக்வல நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

சிங்களம், தமிழ், பர்கர், முஸ்லிம் என இன வேறுபாடின்றி ஒரு தாயின் பிள்ளைகளாக கைகோர்த்து நாட்டை கட்டியெழுப்ப அனைவரையும் இணையுமாறு அழைப்பு விடுத்தார்.

Leave A Reply

Your email address will not be published.