3-வது முறை பிரதமராக மோதி பதவியேற்றார்

டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 9) மாலை 7:15 மணிக்கு, நரேந்திர மோதி, மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

நரேந்திர மோதியுடன், அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்களும் அமைச்சர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர்.

விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்துகொண்டார்.

இந்தப் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வற்கு வெளிநாட்டுத் தலைவர்கள் பலர் டெல்லி வந்துள்ளனர். சார்க் நாடுகளின் (SAARC) தலைவர்களுக்கும் விழாவுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

18-வது மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோதி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், இந்த முறை பா.ஜ.க-வுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.

மேலதிக செய்திகள்

உலகக் கிண்ணப் போட்டிக்கு நான் விரும்பும் அணியை வழங்கவிடில், நான் தலைமை தாங்கமாட்டேன் – வனிது ஹசரங்க.

 

 

வேலைநிறுத்தம் செய்யும் 72 ரயில் ஓட்டுனர்களுக்கு பதவி உயர்வு.

 

 

2025 வரவு செலவு திட்டம் புதிய ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும்.. அதுவரை இடைக்கால நிலையான கணக்கு.

 

2030 ஆம் ஆண்டு வரை நாட்டை ஆட்சி செய்ய ஜனாதிபதி ரணிலுக்கு ஆணை வழங்கப்பட வேண்டும் – மகிந்த அமரவீர.

 

வெளியானது இந்திய அமைச்சரவை பதவிகளுக்கு நியமிக்கப்படும் அமைச்சர்கள் தொடர்பில் உத்தேச விபரங்கள்

 

 

மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டு, புதிய அமைச்சரவையை ஆசிர்வதிப்பதற்காக அழைக்கப்படும் திருநங்கைகள் !

 

யாழில் அரசியல் கருத்துக் கள நிகழ்வு பெருமளவானோரின் பங்கேற்புடன் ஆரம்பம்!

 

 

சட்டவிரோதமாக மருந்துகளை கொண்டு வர நிறுவனமொன்றுக்கு 286 உரிமங்கள் வழங்கியதில் சிக்கல்!

Leave A Reply

Your email address will not be published.