மும்பையில் பெண் ஒருவர் ஆன்லைன் மூலம் வாங்கிய ஐஸ்கீரிமில் மனித விரல்..!

இந்தியாவில்(India) பெண் ஒருவர் வாங்கிய ஐஸ்கீரிமில் மனித விரல் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு பேசுபொருளாகியுள்ளது.

மும்பையில்(Mumbai) பெண் ஒருவர் நிகர்நிலையில்(online) மூலம் வாங்கிய ஐஸ்கீரிமில் மனித விரல் காணப்பட்டுள்ளது.

குறித்த பெண் Yummo ஐஸ்கிரீம் நிறுவனத்திடம் இருந்து கோன் ஐஸ்கிரீமை ஓர்டர் செய்துள்ளார்.

ஐஸ்கிரீமை சாப்பிடும் போது தான் உள்ளே மனித விரல் இருப்பதை கண்டுப்பிடித்துள்ளார். உடனே அதை புகைப்படம் மற்றும் காணொளி எடுத்து சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து மலாட் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் தெரிவித்த அவர், “நான் ஒரு மருத்துவர், அதனால் உடல் உறுப்புகள் எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியும்.

அதை கவனமாகப் பரிசோதித்தபோது, ​​அதன் கீழ் நகங்கள் மற்றும் கைரேகைப் பதிவைக் கவனித்தேன். அது கட்டைவிரலைப் போல் இருந்தது. நான் அதிர்ச்சியடைந்துள்ளேன்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உணவுக் கலப்படம் மற்றும் மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தியதற்காக Yummo நிறுவனம் மீது இப்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து மேலதிக விசாரணை நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.