மும்பை அணி 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி.

பஞ்சாப் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணித்தலைவர் ரோகித் சர்மா அரைசதம் கடந்து கைகொடுக்க, மும்பை அணி 48 ரன் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது.

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) 13வது சீசன் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. அபுதாபியில் நடந்த லீக் போட்டியில் பஞ்சாப், மும்பை அணிகள் மோதின. பஞ்சாப் அணியில் முருகன் அஷ்வினுக்கு பதிலாக கவுதம் தேர்வானார். மும்பை அணியில் மாற்றம் செய்யப்படவில்லை.

மும்பை அணிக்கு ரோகித் சர்மா (70), போலார்டு (47*), ஹர்திக் பாண்டியா (30*) கைகொடுக்க, 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 191 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் சார்பில் காட்ரெல், ஷமி, கவுதம் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
கடின இலக்கை விரட்டிய பஞ்சாப் அணிக்கு பூரன் (44) ஓரளவு கைகொடுத்தார். கேப்டன் ராகுல் (17), மயங்க் அகர்வால் (25) சோபிக்கவில்லை. பஞ்சாப் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 143 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. மும்பை சார்பில் பட்டின்சன், பும்ரா, ராகுல் சகார் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

Leave A Reply

Your email address will not be published.