அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் மனைவிக்கு கொரோனா!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தான் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக தனது உத்தியோகபூர்வ டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

தனிமைபடுத்தலுக்கு   உடனடியாக செல்லவுள்ளதாக  தெரிவித்தார்.

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் முதல் பெண்மணி மெலனியா டிரம்ப் ஆகியோர்  கொரோனா வைரஸுக்கு பரிசோதனை  செய்த போது அவர்களுக்கு கொரோனா இருப்பது தெரிய வந்தது.

“இன்றிரவு, மெலனியாவும் நானும் COVID-19  பரிசோதனை செய்தோம். என டிரம்ப் வெள்ளிக்கிழமை காலை ட்வீட் செய்துள்ளார்.

அதிகாலை 1 மணியளவில் செய்தியாளர்களுக்கு அளித்த அறிக்கையில், வியாழக்கிழமை மாலை  பரிசோதனையின் உறுதிப்படுத்தல் கிடைத்ததாக மருத்துவரின் கடற்படை கமாடோர் டாக்டர் சீன் கான்லி தெரிவித்தார்.

“ஜனாதிபதியும் முதல் பெண்மணியும் இந்த நேரத்தில் நன்றாக இருக்கிறார்கள், அவர்கள் குணமடையும் வரை வெள்ளை மாளிகையில் தங்க விரும்புகிறார்கள்” என்று கான்லி தெரிவித்துள்ளார்.

“வெள்ளை மாளிகையின் மருத்துவக் குழுவும் நானும் அவதானித்து வருகிறோம் ” என கான்லி மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.