சென்னைக்கு ஹட்ரிக் தோல்வி. 7 ஓட்டங்களால் வென்றது ஹைதராபாத்.

ஐதராபாத்துக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் சென்னை அணி 7 ரன்னில் வீழ்ந்தது. தோனி, ஜடேஜா ஆட்டம் இலக்கை எட்ட உதவவில்லை.

ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. துபாயில் நடந்த லீக் போட்டியில் தோனியின் சென்னை அணி, வோனரின் ஐதராபாத்தை சந்தித்தது. நாணய சுழற்சியில் வென்ற ஐதராபாத் அணி கப்டன் வோர்னர் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.

சென்னை அணியில் முரளி விஜய், ருதுராஜ், ஹேசல்வுட் நீக்கப்பட்டு டுவைன் பிராவோ, அம்பதி ராயுடு, ஷர்துல் தாகூர் சேர்க்கப்பட்டனர்.

ஐதராபாத் அணிக்கு வார்னர் (28), மணிஷ் பாண்டே (29) கைகொடுத்தனர். வில்லியம்சன் (9) ஏமாற்றினார். அபிஷேக் 31 ரன் எடுத்தார். இளம் இந்திய வீரர் பிரியம் கார்க், அரைசதம் எட்டினார். ஐதராபாத் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 164 ரன்கள் எடுத்தது. பிரியம் கார்க் (51), அப்துல் சமத் (8) அவுட்டாகாமல் இருந்தனர். சென்னை சார்பில் சகார் 2, ஷர்துல் தாகூர், பியுஸ் சாவ்லா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

சென்னை அணிக்கு வாட்சன் (2), அம்பதி ராயுடு (8), டுபிளசி (22), கேதர் ஜாதவ் (3) என யாரும் கைகொடுக்கவில்லை. ஜடேஜா 50 ரன் எடுத்து ஆறுதல் தந்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 28 ரன் தேவைப்பட்டன.

அப்துல் சமத் வீசிய முதல் பந்து ‘வைடு’ ஆக (5 ரன்) சென்றது. மீண்டும் வீசிய முதல் பந்தில் 2 ரன் எடுத்த தோனி, அடுத்த இரு பந்தில் பவுண்டரி உட்பட 5 ரன் எடுத்தார். கடைசி 3 பந்தில் 8 ரன் மட்டும் எடுக்கப்பட்டன. சென்னை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 157 ரன்கள் மட்டும் எடுத்து 7 ஓட்டங்களால் வீழ்ந்தது. தோனி (47), குர்ரான் (15) அவுட்டாகாமல் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.