இலங்கைக்கு கடத்த முயன்ற 124 கிலோ கஞ்சா பறிமுதல்; ஐவர் கைது.

காரைக்குடி வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற 124 கிலோ கஞ்சா காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்தக் கஞ்சா ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியில் இருந்து காரைக்குடிக்கு கடத்தி வரப்பட்டதாகவும் இது தொடர்பாக ஐந்து பேர் கைதாகி உள்ளனர் என்றும் காவல் துறை தெரிவித்துள்ளது.

அப்பகுதி காவல் உதவி ஆய்வாளர் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஓரிடத்தில் கார் ஒன்று சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டு இருந்தது. அதன் அருகே நின்றிருந்த மூன்று பேர் காவல் துறையினரைக் கண்டதும் காரில் ஓட்டம்பிடித்தனர். எனினும் சமயபுரம் அருகே உள்ள காவல் சோதனைச் சாவடியில் அந்தக் கார் தடுத்து நிறுத்தப்பட்டது. அதில் இருந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையின் போது தங்களிடம் ஒப்படைக்கப்படும் கஞ்சாவை உரிய இடத்தில் சேர்த்தால் ரூபாய் முப்பதாயிரம் கிடைக்கும் என்றும் அதற்காக கஞ்சா கடத்தலில் ஈடுபட்டதாகவும் கைதானவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.