ரோயல் சேலஞ்சர் பெங்களூர் அணி வெற்றி.

ஐ.பி.எல்., தொடரின் 13வது தொடர் எமிரேட்சில் நடக்கிறது. அபுதாபியில் நடந்த லீக் போட்டியில் பெங்களூர், ராஜஸ்தான் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் அணி கப்டன் ஸ்டீவ் ஸ்மித் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.

ராஜஸ்தான் அணிக்கு மஹிபால் லாம்ரர் (47), டிவாட்டியா (24*), பட்லர் (22) கைகொடுக்க, 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்தது. பெங்களூரு சார்பில் யுவேந்திர சகால் 3 விக்கெட் கைப்பற்றினார்.
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய பெங்களூரு அணிக்கு கேப்டன் விராத் கோஹ்லி (72*), தேவ்தத் படிக்கல் (63) கைகொடுக்க, 19.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Leave A Reply

Your email address will not be published.