பாரீசுக்கு வெளியே நடந்த சம்பவத்தில் இலங்கையர்கள் 5 பேர் இறந்த சோகம் மற்றும் 5 பேர் காயம்

பாரீசுக்கு வெளிப்புறமான pavilion in Noisy-le-Sec (Seine-Saint-Denis) எனும் பகுதியில் நடந்த ஒரு தாக்குதல் சம்பவத்தால் ஐந்து பேர் இறந்துவிட்டதாகவும் அது ஒரு மிகப் பெரிய குடும்ப சோகம் என்றும் பிரெஞ்சு செய்தித்தாளான Le Parisien விவரித்துள்ளது.

பாரிஸுக்கு வெளியே Noisy-le-Sec, (Seine-Saint-Denis) நகரின் rue Emmanuel Arago வீதியில் இன்று (3) சனிக்கிழமை காலை ஒரு நபர் பல பெரியவர்களையும் குழந்தைகளையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

ஓட்டலில் இரத்தப்போக்கு
இறந்த ஐந்து பேரில் நான்கு குழந்தைகள் என்று பெயரிடப்படாத போலீஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது. அக்குழந்தைகள் சில மாதங்கள் முதல் 14 வயது வரை இருக்க வேண்டும் என தெரிய வருகிறது.

கொல்லப்பட்ட ஐந்தாவது நபர் ஒரு பெண், என L’est Républicain தெரிவித்துள்ளது.

மேலும் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர், மேலும் இருவர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களில் ஒருவர் குற்றவாளி என அறியப்பட்டுள்ளதாக ,அந்த செய்தித்தாள் மேலும் குறிப்பிட்டுள்ளது.

தொலைக்காட்சி நிலையமான BFM , ஒரு இளைஞன் உதவி கேட்க நகரத்தில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு இரத்தப்போக்குன் வந்து , குடும்ப உறுப்பினர்களை கத்தி மற்றும் சுத்தியலால் தாக்கிய உறவினரைப் பற்றி தெரிவித்ததாக செய்தி வெளியிட்டுள்ளது.

மோதல்
தாக்குதலுக்கான நோக்கம் இன்னும் அறியப்படவில்லை, ஆனால் Le Figaro செய்தித்தாள் கருத்துப் படி, குடும்ப மோதல் ஒன்றாக இருக்க முடியுமா என்று போலீசார் விசாரிக்கின்றனர்.

தாக்குதல் நடத்தியவர் கொல்லப்பட்ட குடும்பத்தின் ஒரு நெருங்கிய உறவினர் என்றும், அவர்கள் அனைவரும் இலங்கை யாழ்.சண்டிலிபாய் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவருகிறது.


சனிக்கிழமை காலை அவசர சேவைகள் மற்றும் போலீசார் அவ்விடத்துக்கு வந்து குவிவதை சமூக ஊடகங்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் காட்டுகின்றன.

பொலிஸ் தலைமையக செய்திகளின்படி , குற்றம் சாட்டப்பட்டவர் சுயநினைவின்றி கோமா நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிய வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.